சமண சமயத்தில் காணப்படும் சூழலியல் மெய்யியலுக்கு ஆதரவான கருத்துக்கள் - ஒரு நோக்கு

No Thumbnail Available
Date
2019
Authors
இரத்தினசபாபதி, பிரேம்குமார்
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka
Abstract
ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உருவான துறையாக இருக்கும் சூழலியல் மெய்யியல், மெய்யியலின் ஒரு முக்கிய பகுதியாக விளங்கி வரும் ஒழுக்கவியலுடன் தொடர்புபட்டு காணப்படுகிறது. இயற்கைச்சூழலைப் பாதுகாத்தல் என்ற கருத்து பேண்தகு அபிவிருத்தியில் முக்கிய பங்கினை வகித்து வருவதனை நாம் அறிவோம். சூழலின் முக்கிய கூறுகளான தாவரங்கள், விலங்குகள், இயற்கைப் பொருட்கள் என்பவற்றுக்கு மனிதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை ஆராய்வதனையும் அதனைத் தடுப்பதையும் நோக்காகக் கொண்டு உருவான துறையாக சூழல் மெய்யியல் காணப்படுகிறது. சூழல் மெய்யியல் அதன் உருவாக்கத்திலும் இயல்பிலும் நேர்க்காட்சிவாத தன்மை கொண்டதாகவும் பகுத்தறிவு தன்மை கொண்டதாகவும் காணப்பட்ட போதிலும் கீழைத்தேச சமய தத்துவங்களில் (இந்திய மற்றும் சீன தத்துவங்கள்) சுற்றுச் சூழல் தொடர்பான அனுபூதி (அலளவiஉ) மற்றும் பௌதீக அதீத கருத்துக்கள் உண்டு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆயினும் சமண மெய்யியல் கருத்துக்கள் எவ்வகையில் சூழலியல் மெய்யியலுடன் தொடர்புபட்டுள்ளன என்ற விடயம் தெளிவாக ஆராயப்படவில்லை சமண தத்துவம் நேர்க்காட்சிவாத அறிவு முறையுடன் பௌதீக அதீத அறிவு முறையினைக் கொண்டு தனது கருத்துக்களை நிறுவ முற்படுகிறது. சூழலின் முக்கிய கூறுகளான தாவரங்கள், விலங்குகள் மற்றும் இயற்கைப் பொருட்கள் எவ்வாறு சமணத்தில் நோக்கப்படுகின்றன என்பது முக்கிய விடயமாக இங்கு ஆராயப்படுகிறது. இந்த விடயம் சூழல் மெய்யியலுடன் தொடர்புடையது. மேற்குறிப்பிட்ட சமணத்தின் சூழல் மெய்யியல் கருத்துக்களை பகுப்பாய்வு செய்வதே இவ்வாய்வு கட்டுரையின் நோக்கமாகும்.
Description
Keywords
சூழலியல் மெய்யியல், பேண்தகு அபிவிருத்தி, தாவரங்கள், விலங்குகள்,, நேர்க்காட்சிவாதம்
Citation