மட்டக்களப்பில் 19 ஆம் நூற்றாண்டின் கல்வி நடவடிக்கைகள் - வரலாற்றுப் பார்வை

No Thumbnail Available
Date
2017
Authors
Chrisdina Nirojini, P
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Arts Research session, south Eastern university
Abstract
மட்டக்களப்பில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சி இடம்பெற்றுள்ளது. அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார ரீதியாக ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கு மட்டக்களப்பும் விதிவிலக்கல்ல. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களைவிட பிரித்தானியராட்சியில் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கு கிறிஸ்தவ மிஷனரிமாரின் வருகையும் அவர்களுடைய சேவைகளும் குறிப்பிடத்தக்கன. 19, 20 ஆம் நூற்றாண்டுகளின் முற்பகுதியில் இவர்களது பணிகள் இடம்பெற்றன. மட்டக்களப்பில் 19 ஆம் நூற்றாண்டில் மாற்றங்களைத் தோற்றுவித்த கல்விச்சேவைகள், அதனால் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட சமூகநிலை மாற்றங்களை ஆவணப்படுத்துவது இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வு முறையானது வரலாற்றடிப்படையில் அமைந்துள்ளது. பிரித்தானிய ஆவணங்களை முதல்நிலைத் தரவுகளாகக் கொண்டும் ஏனைய நூல்கள், கட்டுரைகள், இணையத்தள தகவல்களை இரண்டாம்நிலைத் தரவுகளாகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
Description
New horizons towards human development
Keywords
மட்டக்களப்பு, 19 ஆம் நூற்றாண்டு, பாடசாலைகள்
Citation