| dc.contributor.author | Kanneraj, A | |
| dc.date.accessioned | 2021-05-21T08:52:29Z | |
| dc.date.available | 2021-05-21T08:52:29Z | |
| dc.date.issued | 2019 | |
| dc.identifier.issn | 20126573 | |
| dc.identifier.uri | http://www.digital.lib.esn.ac.lk/1234/14421 | |
| dc.description.abstract | உள்ளூராட்சி மன்றங்கள் ஜனநாயகத்தின் அடிமட்ட அலகுகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவ் மன்றங்களில் சமூகத்தின் இரு பாலாரினதும் பிரதிநிதித்துவத்தினைக் கொண்டிருப்பது அவசியமானதாகும். ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள வவூணதீவு மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக இறுதியாக 2008 மார்ச் 10ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் பெண் பிரதிநிதிகள் எவரும் தோர்வு செய்யப்படவில்லை. பிரதேச சனத்தொகையில் அதிகளவினராகக் காணப்படும் பெண்கள், மக்கள் பிரதிசிதிகளாகத் தேர்வு செய்யப்படாமை என்பதை ஆய்வுப் பிரச்சிகைனயாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களே குறித்த பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ளுகின்றன. அவ்வாறு கொள்கைத் தீர்மான்களை மேற்கொள்ளும் போது பெண்கள் மற்றும் சிறார்கள் தொடர்பிலான தீர்மானங்கள், பெண்களின் பிரதிநிதித்துவம் இன்றி ஆண்களினால் மேற்கொள்ளப்படுவது சிறப்பானதொரு விடயமல்ல. அத்துடன் குறித்த கொள்கைத் தீர்மானங்கள் எதிர்பார்க்கப்பட்ட பலாபலன்களைக் கொண்டுவராது என்பது கண்கூடு. மறுபுறம் குறித்த இரு பிரதேசங்களும் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டதும், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களையும் அதிகமாகக் கொண்ட பிரதேசங்களுமாகும். அத்தகைய பிரதேசத்தின் அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதிகளாக எவரும் தேர்வு செய்யப்படவில்லை என்பது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதற்கான காரணங்களை கண்டறியும் நோக்கத்தின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. | en_US |
| dc.language.iso | ta | en_US |
| dc.publisher | Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka | en_US |
| dc.subject | உள்ளூராட்சி மன்றம் | en_US |
| dc.subject | பெண்கள் பிரதிநிதித்துவம் | en_US |
| dc.title | யுத்தத்தின் பின்னரான மட்டக்களப்பு மாவட்டத்தின உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம்: விசேட ஆய்வு மண்முனை மேற்கு மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகள் | en_US |
| dc.type | Article | en_US |