அம்பாறை மாவட்டத்தில் சமூகங்களுக்கிடையே சமூக நல்லுறவை எற்படுத்துவதில் சமய நிறுவனங்களின் பங்கும், அவை எதிர்நோக்கும் சவால்களும்

Show simple item record

dc.contributor.author Sachithanantham, P
dc.date.accessioned 2022-03-29T05:08:30Z
dc.date.available 2022-03-29T05:08:30Z
dc.date.issued 2011
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk/1234/14577
dc.description.abstract அம்பாறை மாவட்டம் பல்லின, பல்சமய, சமூகம் வர்கின்ற ஒரு மாவட்டமாகும். இச் சமூகங்களுக்கிடையே அடிப்படையில் பல்வேறுபட்ட வேறுபாடுகள் காணப்படுகின்றன. மதத்தால், இனத்தால், வேறுபட்ட மக்களுக்குள் வேறுபாடுகள் காணப்படுவது இயல்பானது. காலத்திற்கு காலம் குறிப்பாக 1980களுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் இச் சமூகங்களுக்கிடையே குரோத மனப்பாங்குகள் வளர்ச்சியடைந்து பிணக்குகள் ஏற்பட்டும் வந்திருக்கின்றன. இந் நிலைப்பாடு குறிப்பாக 1990 களில் உச்ச நிலையை அடைந்து வளர்ந்து வரலாயிற்று. அதன் பின்னர் தீவிரமடைந்த இன முறுகல்கள் அச் சமூகங்களுக்கிடையே மென்மேலும் பிணக்குகளை வளர்ச்சியடையச் செய்திருந்தன. இவற்றினைத் தடுப்பதற்கு அரச, அரசசார்பற்ற சமய, சமூக நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. அத்தோடு 2000 ம் ஆண்டு காலப்பகுதியிலும் அதனைத் தொடர்ந்தும் அப்பிரதேசத்தில் இயங்கிவந்த சமய சமூக நிறுவனங்கள் மேற்கொண்ட இன நல்லிணக்க முயற்சிகள் இப் பிரதேசத்தில் வாழும் மக்களிடையே ஓரளவு சமூக நல்லுறவை மீளவும் கட்டியெழுப்ப உதவியது. இதற்கு கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று பகுதிகளில் இயங்கி வரும் சமய நிறுவனங்கள் எத்தகைய பங்கினை வகித்துள்ளன அவை எவ்வாறான சவால்களை எதிர்நோக்கின என்பதனை ஆராய்வதாக இவ் ஆய்வு அமையும். ஓவ்வொரு சமூகத்தினரும் எதிர் கொள்ளும் பிரச்சினைகளின் கனதி அல்லது பெறுமானம் வேறுபட்டதாக காணப்படுதலும் அவ்வாறு வேறுபட்ட பிரச்சினைகளையுடைய சமூகங்களுக்கிடையே சுமூகமான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதென்பதும் மேலும் சவாலான விடயமாக அமைகின்றன. ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் வாழும் பல்லின சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் காணப்பட வேண்டியது இன்றியமையாதது. அதனை கட்டியெழுப்பாத பட்சத்தில் இனங்களுக்கிடையே பிணக்குகள் ஏற்பட்டு அம்மாவட்டத்தின் இயல்பு நிலை பாதிக்கப்படும். ஆகவே இன நல்லிணக்கம் ஒவ்வொரு சமூகத்தினதும் நிலை வாழ்வுக்கு இன்றியமையாததொன்றானதாகும். ஒரு மாவட்டத்தில் ஒரு 'சமூகம் ' தனித்து வாழுமாக இருந்தால் அச் சமூகத்தில் இன நல்லிணக்கத்தின் தேவைப்பாடு முக்கியம் பெறுவதை விட பல்லின சமூகத்திற்கிடையே அதனுடைய தேவை இன ;றியமையாத இடத்தைப் பெறுகின்றது. சமூக நல்லுறவு (Social Harmony) என்பதன் அர்த்தம் பல்லின சமூகங்கள் ஒன்றாக வாழுதலையே சுட்டி நிற்கின்றது. சமூக நல்லுறவை கட்டியெழுப்புகின்ற நிறுவனங்களிலே சமய நிறுவனங்களுக்கு தனியான இடமுண்டு. பாடசாலை, குடும்பம், அரச, அரசசார்பற்ற அமைப்புக்கள் என்பவற்றை விட சமூகத்தில் சமய நிறுவனங்களான ஆலயம், உலமா சபை, இராமகிருஸ்ண மிஷன், பௌத்த விகாரைகள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் என்பன மக்களோடு மக்களாக மிக உணர்வு பூர்வமாக செயற்படுகின்ற நிறுவனங்களாக உள்ளன. அந் நிறுவனங்கள் குறுகிய இனவாத, அரசியல், பொருளாதார நோக்கங்களைத் தாண்டி செயற்படுமாயின் அவ்வச் சமயங்கள் போதிக்கின்ற உண்மையான சமூக நல்லுறவை கட்டியெழுப்பும் பணியை அவை நிறைவேற்ற முடியும். en_US
dc.language.iso ta en_US
dc.publisher Eastern University, Vantharumoolai, Chenkalady Sri Lanka, en_US
dc.relation.ispartofseries 10th Annual Research Session;
dc.subject பல்லின சமூகம் en_US
dc.subject சமூக நல்லுறவு en_US
dc.subject சிவில் சமூகம் en_US
dc.subject சமய நிறுவனங்கள் en_US
dc.title அம்பாறை மாவட்டத்தில் சமூகங்களுக்கிடையே சமூக நல்லுறவை எற்படுத்துவதில் சமய நிறுவனங்களின் பங்கும், அவை எதிர்நோக்கும் சவால்களும் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account