இராஜம்கிருஸ்ணனின் நாவல்கள் வெளிப்படுத்தும் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்

Show simple item record

dc.contributor.author ஞா. சுதர்சுயா
dc.date.accessioned 2024-03-14T04:33:21Z
dc.date.available 2024-03-14T04:33:21Z
dc.date.issued 2023
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15130
dc.description.abstract இராஜம்மிருஸ்னாவின் படைப்புக்களுக்கென இலக்கிய உலகில் ஓர் முக்கியத்துவம் உண்டு. 1925 ஆம் ஆண்டு முசிறி என்ற இடத்தில் பிறந்தவர் இராஜம்கிருஸ்ணன். இவர் ஒரு இலக்கியப் படைப்பாளியாக உருவெடுப்பபதற்கு இவரது மும்மொழி நூற்புலமையும் தமிழ் இதழ்களின் மீதான வாசிப்பனுபவமும் முக்கிய காரணங்களாக அமைந்தன. இராஜம்கிருஸ்ணனில் சிறுகதை, நாடகம், பயணக்கட்டுரை, மொழிபெயர்ப்பு போன்ற படைப்புக்கள் முற்போக்குச் சிந்தனை. சமூக நோக்கு, உறுதியான கொள்கைப் பிடிப்பு, பெண்ணியப்பாவை. அடித்தட்டு மக்களையும் பாத்திரமாக்கும் திறன், நேர்த்தியான கதை சொல்லல், வேறுபட்ட உள்ளடக்கங்கள். சிறந்த மொழிநடை முதலானவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளன. இவ்வாறு பல்துறைசார் படைப்புக்களை வெளியிட்டிருந்தாலும் இலக்கியப்புலத்தில், இவரது கூட்டுக்குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், மானுடத்தின் மகரந்தங்கள், சுழலில் மிதக்கும் தீபங்கள், மண்ணகத்துப் பூந்துளிகள், கோபர பொம்மைகள், மாறிமாறிப் பின்னும், கோடுகளும் கோலங்களும் ஆகிய நாவல்கள் தனித்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன. ஏளைய இலக்கிய ஆளுமுகளின் தாவல்களை விட இவரது நாவல்கள் பல விடயங்களைப் பற்றி பேசினாலும் அவற்றுள் பெண்ணியத்தை பற்றி எடுத்துரைப்பதில் இணையற்றவையாகத் திகழ்கின்றன. பெலன் அடக்குமுறைக்குட்பட்ட சூழலில் இவர் வாழ்ந்ததனால் பெண்ணியம் சார்ந்த விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளமை இவரது நாவல்களைப் படிக்கும்போது நன்கு புலனாகிறது. சுருங்கக்கூறின் பெண்ணியம் என்பது அனைத்து வகைப்பெண்களும் சம உரிமைகளோடு வாழ்தல் ஆகும். அந்தவகையில், ஆண், பெண் சமத்துவம், பெண்சிசுக்கொலை, பெண்கல்வி மறுக்கப்படுதல், வரதட்சணை, பாலியல் சுரண்டல். கைம்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மறுமணத்தடை, வேலைக்குச்செல்லும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கலாசாரச் சிக்கல் என சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவற்றிற்கான தீர்வுகளையும் இவரது நாவல்கள் எடுத்துரைக்கின்றன. பெண்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட இவரது நாவல்கள் அளப்பரிய பங்காற்றுகின்றன. அந்தவகையில் 1980 2000 வரையான காலப்பகுதில் எழுந்த இவரது நாவல்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றியும், அந்நாவல்களிலூடாகவே அச்சிக்கல்களுக்காக அவர் கூறியுள்ள நிரவினையும் சமூகத்திற்கு எடுத்துரைக்கும் நோக்கத்துடன் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஈழத்தைப் பொறுத்தவரையில், இவரது படைப்புகளில் வெளிப்படும் பெண்ணியம் சார்ந்த விடயங்கள் தொடர்பான ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது ஆய்வுப் பிரச்சினையாகும். இராஜம்கிருஸ்ணனின் நாவல்கள் மற்றும் குறித்த ஆய்வுடன் தொடர்புபட்டவகையில் வெளிவந்துள்ள நூல்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வு மூலங்களாகப் பயன்படுகின்றன. இவ்வாய்வானது விபரண ஆய்வு அணுகுமுறையினூடாக மேற்கொள்ளப்படுகிறது. en_US
dc.language.iso other en_US
dc.publisher DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA en_US
dc.subject பெண்ணியம் en_US
dc.subject நாவல்கள் en_US
dc.subject சமஉரிமை en_US
dc.subject தனித்துவம் en_US
dc.subject சமூகம் en_US
dc.title இராஜம்கிருஸ்ணனின் நாவல்கள் வெளிப்படுத்தும் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வுகளும் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account