மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமையும் பிரயோகமும்: பதுளைத் தேர்தல் மாவட்டத்தில் 2015ஆம் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு

Show simple item record

dc.contributor.author யோகராஜா, ஆறுமுகம்
dc.contributor.author புஸ்பகுமார், செல்லதுரை
dc.date.accessioned 2024-03-14T06:22:16Z
dc.date.available 2024-03-14T06:22:16Z
dc.date.issued 2023
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15153
dc.description.abstract நவீன ஜனநாயக அரசின் இறைமையானது மக்களுக்கு சொந்தமானதாகும். மக்கள் இறைமை என்ற எண்ணக்கருவானது அரசின் மீயுயர் அதிகாரத்தின் உரித்து மக்களுக்கு சொந்தமானது என்பதாகும். மக்களாட்சி தத்துவங்களில் ஒன்றாக வாக்குரிமை காணப்படுகின்றது. இவ் விலைமதிக்க முடியாத வாக்குரிமையின் பிரயோகமானது ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டியது அவசியமாகும். அண்மை காலங்களில் இலங்கையில் வாக்குரிமையின் பிரயோகம் தொடர்பிலான விடயங்கள் பெரிதும் பேசப்பட்ட ஒன்றாக காணப்படுகின்றது. இலங்கையில் மலையக தமிழ் வாக்களார்களில் பெரும்பாலானவர்கள் பெருந்தோட்டங்களிலேயே வாழ்கின்றனர். ஆதலால் தங்கள் வாழ்கையினை முன்னோக்கி நகர்த்திச் செல்ல தங்களது அரசியல் பிரதிநிதிகளை சார்ந்திருப்பது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் பதுளை தேர்தல் மாவட்ட மலையக தமிழ் வாக்காளர்கள் தமது வாக்குரிமையின் பிரயோகம் தொடர்பில் காட்டும் அசமந்தமான போக்கு அவர்களுடைய பிரதிநிதித்துவத்தில் தாக்கம் செலுத்துவதாகக் காணப்படுகின்றது. இம் மக்கள் நங்களுக்காக இரண்டு தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ள நிலையில் தமக்கான மேலதிகமாக ஒரு பிரதிநிதித்துவத்தை பெற வேண்டிய நிலையில் அவ்வாய்ப்பினை 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தவறவிட்டனர். இப்பிரச்சினையினை மையமாகக் கொண்டு இவ்வாய்வு இடம்பெற்றுள்ளது. இவ்வாய்விலூடாக வாக்குரிமையின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு, 2015ஆம் ஆண்டு, 2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் இம்மக்களின் வாக்குரிமையின் பிரயோகம், பிரதிநிதிகளுடைய செயற்பாடுகள் என்பன நோக்கங்களாகக் கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்விற்கான முதலாம் நிலைத்தரவுகள் வினாக்கொத்து மூலமாகப் பெறப்பட்டுள்ளதோடு, இரண்டாம் நிலைத்தரவுகள் ஆய்வுடன் தொடர்புடைய நூல்கள் அறிக்கைகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பவற்றில் இருந்து பெறப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட தரவுகள் Excel மென்பொருள் ஊடாக பண்புசார் மற்றும் அளவுசார் முறைமைகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பண்புசார் தரவுகள் விபரண ரீதியிலான முறையிலும் அளவுசார் தரவுகள் எளிய புள்ளிவிபர முறையிலும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka en_US
dc.subject தேர்தல் en_US
dc.subject பிரதிநிதித்துவம் en_US
dc.subject வாக்களார்கள் en_US
dc.subject வாக்குரிமை en_US
dc.subject ஜனநாயகம் en_US
dc.title மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமையும் பிரயோகமும்: பதுளைத் தேர்தல் மாவட்டத்தில் 2015ஆம் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account