| dc.description.abstract |
இலங்கையின் கல்வித் துறையில் உள்ளடங்கல் கல்வி முறையை செயறப் டுத்துவது
கல்வி முறையின் முக்கியமான பகுதியாகும். இந்த முறையின் மூலம் அனைதது;
மாணவர்களும் தங்கள் திறனுக்கு ஏற்ற வகையில் கல்வி பெற முடியும் எனக்
கருதப்படுகிறது. உள்ளடங்கல் கல்வியின் முக்கியமான நோக்கங்கள் ஆழமான புரிதல்,
திறன்களின் வளர்ச்சி, மொழி விருத்தி என்பனவாகும். ஆனால் இந்த முறையைச்
செயற்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன. குறிப்பாக ஆசிரியர்களுக்கான சவால்கள்
இன்றளவில் பேசுபொருளாக காணப்படுகின்றது. இந்த ஆய்வின் முக்கிய நோக்கம்
மண்முனை தென்மேற்குக் கோட்டப் பாடசாலைகளில் உள்ளடங்கல் கல்வி முறையில்
ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றின் தீர்வுகளைப் பற்றி
ஆராய்வதாகும். ஆய்வின் குறிக்கோள்களாக உள்ளடங்கல் கல்வி முறையின் மூலம்
ஆசிரியர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளை இனங்காணல,; ஆசிரியர் பயிற்சி
தொடர்பான முனN; னற்றங்களைக் கண்டறிதல், உள்ளடங்கல் கல்வி முறையின்
செயல்பாடுகளைச் சீராக்குவதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல் எனப் னவாகும்.
ஆசிரியர்களின் கருத்துக்களை வைதது; இந்த ஆய்வில் ஆசிரியர்களின் கற்பித்தல்
முறைகள் மற்றும் பாடத்திட்ட மாற்றங்கள் பற்றிய சவால்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள்,
பயிற்சி பற்றாக்குறைகள், மாணவர்களின் உளவியல் நிலை மற்றும் மொழித் தடைகள்
போன்ற விடயங்கள் பற்றி கவனம் செலுத்தப்படுகிறது. இது ஓர் கலப்பு
அணுகுமுறையுடன் கூடிய அளவை நிலை ஆய்வாக அமைகிறது. இங்கு காணப்படும்
21 பாடசாலைகளில் நோக்க மாதிரியின் அடிப்படையில் 12 பாடசாலைகள் தெரிவு
செய்யப்பட்டன. இதில் 120 ஆசிரியர்கள் மற்றும் 200 மாணவர்கள் இலகு எழுமாறறு;
மாதிரி ஊடாக தெரிவு செய்யப்பட்டனர். பாடசாலைகளின் இரண்டாம் நிலைத் தரவுகளை
சேகரித்தல், கலந்துரையாடுதல் மற்றும் வினாக்கொத்து நுட்ப முறைகள்
பயன்படுத்தப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. அளவு ரீதியான தரவுகள் ஆள நுஒஉநட
மூலமும் பண்பு ரீதியான தரவுகள் கருப்பொருள் அடிப்படையிலும் பகுப்பாய்வுக்கு
உட்படுத்தப்பட்டன. கணிக்கப்பட்ட முடிவுகளில் ஆசிரியர்களின் பயிற்சி பற்றாக்குறையை
55சதவீதமான ஆசிரியர்கள் குறிப்பிட்டு இருந்தனர், வளங்கள் மற்றும்
உபகரணங்களின் பற்றாக்குறை என்று 70 சதவீதமும், நேர மேலாண்மை சிக்கல்கள்
என்று 65 சதவீதமும், சமூக மற்றும் மனப்போக்கின் மாற்றம் என்று 78 சதவீதமும்,
தனிப்பட்ட கவனம் வழங்குவதில் சிரமம், மொழி மற்றும் தொடர்பு சிக்கல்கள் என்று 46
சதவீதமும், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆதரவு பற்றாக்குறை, தொழில்நுட்ப வசதிகள்இன்மை என்று 85 சதவீதமான ஆசிரியர்களின் முடிவுகள் மிகவும் பொதுவாக
காணப்பட்டன. மேலும் பாடதத் pட்ட மாற்றங்கள் மறறு; ம் மாணவர்களின் உளவியல்
அழுத்தங்கள் மாணவர்களின் திறனைத் தடுக்கும் என 70 சதவீதமான ஆசிரியர்கள்
குறிப்பிட்டு இருந்தனர். நிறுவன ஆதரவு மற்றும் பயிறச் p வழிகாட்டி முறைகள் இந்த
பிரச்சினைகளை எதிர்கொள்ள உதவும் முக்கிய கூறுகள் ஆகின்றன, இதறக் hன
தீர்வுகளாக ஆசிரியர்களுக்கான தொடர்ச்சியான பயிற்சி மற்றும் தொழில்நுட்ப
வழிகாட்டுதல் வழங்க வேண்டும், பாடத்திட்டத்தில் உள்ள மாற்றங்களை
ஆசிரியர்களின் அனுபவங்களின் அடிப்படையில் செய்ய வேண்டும், மாணவர்களுக்குப்
பொதுவான பயிற்சி மற்றும் மதிப்பீடு முறைகளை எளிதாக்கி, அவர்களின் திறனுக்கு
ஏறப் கற்றல் சூழலை உருவாக்க வேண்டும் என்று இன்னோரன்ன தீர்வுகளும்
முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்களை சரியாக
அணுகாமல் விட்டால் இந்த கல்வி முறையின் பயன்களை முழுமையாக அடைய
முடியாது. பாடத்திட்ட மாற்றங்கள், மொழித் தடைகள், தொழில்நுட்ப சிக்கல்கள்
போன்றவை சிறப்பாக கவனிக்கப்பட்டால் இலங்கையின் கல்விமுறையில் ஒரு நல்ல
மாற்றதi; த காணலாம். இதனை இலங்கை அரசு மற்றும் கல்வித் துறை இணைந்து
செயல்படுத்த வேண்டும். இந்த ஆய்வு இலங்கையின் பாடசாலைகளில் உள்ளடங்கல்
கல்வி முறையின் செயல்பாட்டில் சிறந்த முன்னேற்றத்துக்கு வாய்ப்பு வழங்கும் என
நம்பப்படுகின்றது. |
en_US |