| dc.description.abstract |
நூலகதது; றையில் கணினியும், அது தொடர்பான அறிவுத்திறனும் இன்றியமையாத
விடயங்களாக தற்காலத்தில் விளங்குகின்றன. இந்த வகையில் நூலகத்துறையிலும்
நவீனசேவைகளை வழங்குவதில் கணினிகளும், அதனைப் பயன்படுத்துதல் சார்
அறிவுத்திறனும் முக்கியத்துவம் பெறுகின்றன. இவ் ஆய்வின் முக்கிய நோக்கமாக
கிழக்கு மாகாணப ; பொது நூலகங்களின் கணினி வளம், அதனைப் பயன்படுத்துதல்
தொடர்பான கருத்துக்களை இனங்காண்பதைக் கொண்டுள்ளது. இவ் ஆய்வில் கிழக்கு
மாகாணத்தில் காணப்படும் பொது நூலகங்களிலிருந்து 36 நூலகங்களில் உள்ள 65
நூலக ஊழியர்களும் ஆய்வுக்குட்படுதத் ப்பட்டனர். ஆய்வின் நோக்கத்தினை அடையும்
முகமாக நூலகத்தில் காணப்படும் கணினி வளம், பணியாளர்களின் கணினி
தொடர்பான அறிவுதத் pறன், மேம்பாட்டிற்கு தேவையான வளங்கள், பயிற்சிகள் என்பன
தொடர்பான முன்பு பரிசோதிக்கப்பட்ட புழழபடந விண்ணப்பப் படிவம் மூலமாக
வினாக்கொத்து வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட தரவுகள்
யாவும் ஆளு நுஒஉநட மென்பொருளினூடாக பகுபாய்வு செய்யப்பட்டது. இவ் ஆய்வில்
கிழக்கு மாகாணதத் pல் காணப்படும் பொது நூலகத்தில் சேவையாற்றும் 3 நூலகர்கள்,
55 நூலகப்பொறுப்பாளர்கள் அல்லது நூலக சேவகர்கள், 7 ஏனைய நூலக
உத்தியோகத்தர்கள் போன்றோரிடம் தமது நூலகங்களின் கணினி வளம்,
கணனியைப் பயன்படுத்தக்கூடிய மனித வளம் போன்றவை தொடர்பாக அளவறி,
பண்பறி முறைகளினூடாக பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பகுப்பாய்வின் மூலம்
கிடைக்கப்பெற்ற முடிவுகள் கிழக்க மாகாண பொது நூலகங்களில் கணினி வளமானது
49.2 வீதம் காணப்படும் அதேவேளை கணினித் தேவையானது 50.8 வீதமாக
காணப்பட்டது. கணினியை கற்றுக்கொண்டவர்கள் 46.8 வீதமும், கணினி தொடர்பான
பயிற்சி அற்றோர் 20.3 வீதமும் கணினியை அனுபவத்தில் இயக்குபவர்கள் 32.8
வீதமும் காணப்பட்டனர். ஊழியர்களுக்கான கணினி தொடர்பான பயிற்கிகளின்
தேவை என 87.7 வீதமானோர் குறிப்பிட்டுள்ளனர.; அத்துடன ; நூலக
நடைமுறைகளுக்கு 70.8 வீதமான நூலகங்களில் கணினி மென்பொருட்கள்
பயன்படுத்தப்படவில்லை போன்றனவும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
மேற்படி ஆய்வின் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ ; இயங்கும் பல பொதுநூலகங்களின் நவீனத்துவமான நூலக வளர்ச்சிப்போக்கிற்கு கணினிகள் அவசியம்
தேவை என்பதுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தமது பணியினை மேம்படுத்த
கணினி தொடர்பான தொழிநுட்ப அறிவினை விருத்தி செய்யும் பயிற்சிகள் வழங்குதல்
அவசியம் என்பனவும் கண்டறியப்பட்டன. இவ் ஆய்வினை அடிப்படையாகக் கொணடு;
உள்ளூராட்சி திணைக்களங்கள் அவற்றின் கீழ் இயங்கும் நூலகப் பணியாளர்களின்
பயிற்சித் தேவைகயை இனங்கண்டு பயிற்சி வழங்க உதவும் அதேவேளை கணினி
வளங்களை வழங்கவேண்டிய நூலகம் தொடர்பான தரவுகளையும் இவ் ஆய்வின்
மூலம் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றை வழங்குவதனூடாக நூலகங்களின்
சேவைகளை தொழிநுட்பரீதியாக நவீனத்துவமான வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்ல
முடியும் என்பன இவ் ஆய்வின் மூலம் பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |