வலைய மட்ட வெளிவாரி மதிப்பீட்டு செயன்முறை ஆரம்ப பிறப்பு ஆசிரியர்களின் கற்பித்தல் செயர்பாடுகளில் ஏற்படும் தாக்கம்

Show simple item record

dc.contributor.author ABDHUL, KAPOOR FASMEEL
dc.date.accessioned 2024-03-06T05:02:53Z
dc.date.available 2024-03-06T05:02:53Z
dc.date.issued 2023
dc.identifier.citation MED312 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15092
dc.description.abstract ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கற்றலில் பிரதாளமாக செல்வாக்குச் செலுத்துகின்ற அம்சம் ஆசிரியர்களின் கற்பித்தல் ஆகும். ஆசிரியர்களின் கற்பித்தலின் வினைத்திறன் மற்றும் விளைதிறனை அதிகரிப்பதில் முறையான மேற்பார்வை, மதிப்பீடு இன்றியமையாதவையாகும். இவ்வாய்வுப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் தொடர்ச்சியாக வெளிவாரி மதிப்பீடு நடைபெற்று வருகின்ற போதிலும் ஆரம்பப்பிரிவு பாடசாலைகளில் இம்மதிப்பீடானது கற்பித்தலில் ஏற்படுத்தியுள்ள தாக்கமானது இதுவரை கண்டறியப்படவில்லை. இதனடிப்படையில் இக் கல்வி வலயத்திலுள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர்களின் கற்பித்தல் செயன்முறையில் வலய மட்ட வெளிவாரி மதிப்பீட்டின் செல்வாக்கு பற்றிய தற்போதய நிலையினை அறிந்து, பொருத்தமான அணுகுமுறைகளைச் சிபாரிசு செய்லது, இவ்வாய்வின் நோக்கமாகும். இதற்காக விபரண கள ஆய்வு வடிவமைப்பில், கலப்பு ஆய்வுமுறை பயன்படுத்தப்பட்டு அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள 37 ஆரம்பப் பிரிவு பாடசாலைகளில் 13 பாடசாலைகளிலிருந்து 13 அதிபர்கள், 147 ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள். அக்கரைப்பற்று கல்வி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் 3 ஆரம்பக் கல்வி ஆசிரியர் ஆலோசகர்கள் நோக்க மாதிரி, படிமுறை எழுமாற்று மாதிரிகளின் அடிப்படையில் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்து மூலமும், நேர்காணல் மூலமும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அளவறிரீதியாகவும், பண்புரீதியாகவும் தரவுப்பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. பகுப்பாய்வின்படி ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்த 35 சதவீதமான ஆசிரியர்களின் துலங்கலின் அடிப்படையில் வலய மட்ட வெளிவாரி மதிப்பீடானது ஆசிரியர்கள் கற்பித்தலில் ஏற்படும் இடர்பாடுகளைக் கண்டு கொள்வதற்கு நிச்சயமாக உதவுவதாகவும். 49 சதவீதமான ஆசிரியர்களிடமிருந்து கற்றல் கற்பித்தலில் உள்ள குறைபாடுகள். சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவானதாக வலய மட்ட வெளிவாரி மதிப்பீடு நடைபெறுகிறது எனவும், 35 சதவீதமான ஆசிரியர்கள் கூற்றின் படி வெளிவாரி மதிப்பீட்டில் இனங்காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு வலய மட்டத்தில் ஆசிரியர் பயிற்சிகள் அல்லது செயலமர்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றன எனவும் தெரிவித்தனர். 45 சதவீதமான ஆசிரியர்கள் வலய மட்ட வெளிவாரி மதிப்பீட்டின் பின்னர் தங்களது கற்பித்தல் முறைகளில் மாற்றங்கள் செய்துள்ளார்கள் என இவ்வாய்விலிருந்து அறியக்கூடியதாகவுள்ளது. இந்த ஆய்வானது வலய மட்ட வெளிவாரி மதிப்பீட்டின் நிலை தொடர்பாக கல்வி அதிகாரிகள் தீர்மானங்களை எடுப்பதற்கும் இதனூடக ஆசிரியர்களின் கற்பித்தலை மேம்படுத்தி ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கல்வியில் அபிவிருத்தியை ஏற்படுத்துவற்கும் உதவும் en_US
dc.language.iso other en_US
dc.publisher DEPARTMENT OF MANAGEMENT FACULTY OF ARTS AND CULTURE EASTERN UNIVERSITY , SRI LANKA en_US
dc.subject ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் en_US
dc.subject கற்பித்தல் செயன்முறை en_US
dc.subject வெளிவாரி மதிப்பீடு en_US
dc.subject கற்றல்-கற்பித்தல் en_US
dc.title வலைய மட்ட வெளிவாரி மதிப்பீட்டு செயன்முறை ஆரம்ப பிறப்பு ஆசிரியர்களின் கற்பித்தல் செயர்பாடுகளில் ஏற்படும் தாக்கம் en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account