இணைப்பாடவிதான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் ஆசிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்பவர் எனும் வகையில் அதிபரின் வகிபாகம்

Show simple item record

dc.contributor.author பிரியசாந்தின், சூரியகுமார்
dc.date.accessioned 2024-03-07T04:49:45Z
dc.date.available 2024-03-07T04:49:45Z
dc.date.issued 2023
dc.identifier.citation MED335 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15096
dc.description.abstract இணைப்பாடவிதான செயற்பாடுகள் என்பது. பாடசாலையொன்றின் மேற்ப்பார்வைக்குக் கீழ்ப்பட்டதாக சாதாரண வகுப்பறைக்கு வெளியே முன்னெடுக்கப்படும் முறையான கலைத்திட்டத்தின் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு உதவக் கூடிய கற்றல் அனுபவத்தை வழங்கும் வேலைத்திட்டமொன்றாகும். அவ்வடிப்படையில் இதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் ஆசிரியர்களின் செயற்பாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு இத்தகைய செயற்பாடுகளை ஆசிரியர்கள் முன்னெடுத்துச் செல்வதில் ஒரு ஏற்பாட்டளர் எனும் வகையில் அதிபரின் வகிபாகம் எத்தகையது என்பதனையும் ஆராய வேண்டியது அவசியமான ஒன்றாக ஆய்வாளனால் இனங்காணப்பட்டதன் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வானது சம்மாந்துறை கல்வி வலயத்தின் நாவிதன்வெளிக் கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு. இப்பாடசாலைகளின் அதிபர்கள் நோக்க மாதிரி அடிப்படையிலும், ஆசிரியர்கள் படையாக்கப்பட்ட எழுமாற்று மாதிரி அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டு, நேர்காணல் மற்றும் வினாக் கொத்துகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்விற்குட்படுத்தி முடிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாய்வினூடாக ஆசிரியர்கள் இணைப்பாடவிதான செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது அவர்களிற்கு எழும் தேவைகள், அதிபரால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வசதிகள், அதிபர், ஆசிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் போது எதிர்நோக்கும் சவால்கள், இணைப்பாடவிதான செயற்பாடுகள் தொடர்பாக ஆசிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிபரின் வகிபங்கினை வினைத்திறனாக்கும் உபாயங்கள் ஆகிய விடயப்பரப்பின் கீழ் முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளதோடு, விதப்புரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆய்விலிருந்து ஆசிரியர்கள் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் போது வளங்களைப் பெற்றுக் கொள்ளல் .வாண்மைத்துவம் சார் வசதிகள், சமூக இடைத்தொடர்பு சார் வசதிகள் ஊக்கல் போன்ற அடிப்படைகளில் தேவைகளைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர் என்பதும் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதில் அதிபர் பல சவால்களை எதிர் கொள்கின்றார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளதோடு. ஆசிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிபரின் வகிபங்கினை வினைத்திறனுடையதாக்கும் உபாயங்களும் முன்மொழியப்பட்டுள்ளன en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka en_US
dc.subject இணைக் கலைத்திட்டம் en_US
dc.subject கலைத்திட்டம் இணைப்பாடவிதான செயற்பாடுகள் en_US
dc.subject ஆசிரியர்களின் தேவைகள் en_US
dc.subject அதிபரின் வகிபாகம் en_US
dc.title இணைப்பாடவிதான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் ஆசிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்பவர் எனும் வகையில் அதிபரின் வகிபாகம் en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account