பாடசாலை கணினி கூட்டங்களின் வினைத்திறன் சிரேஷ்ட இடைநிலை மாணவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் செல்வாக்கு

Show simple item record

dc.contributor.author குணரத்ன, நாச்சியப்பன்
dc.date.accessioned 2024-03-15T04:17:46Z
dc.date.available 2024-03-15T04:17:46Z
dc.date.issued 2023
dc.identifier.citation MED357 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15170
dc.description.abstract மாணவர்களின் அறிவுத் தேடலுக்கான ஆர்வத்தை ஊக்குவிப்பதற்கும் பொது அறிவு விருத்திக்கும் துணைபுரிகின்ற பாடசாலை கணினி கூடங்கள் சிறப்பாக இயங்க வேண்டியது அவசியமாகும். மாணவர்கள் தகவல் தொழினுட்ப பாடத்தில் ஆர்வம் காட்டுகின்ற போதிலும் பாடசாலை மட்டத்தில் அதற்கான செயற்பாடுகள் குறைவாகவே காணப்படுகிறது. இவர்கள் பாடசாலைகளில் கணினி கூடங்களை முழுமையாக பயன்படுத்தாதவர்களாகவும் காணப்படுகின்றார்கள். இதற்கான காரணங்களை அறியும் வகையில் "பாடசாலை கணினி கூடங்களின் வினைத்திறள் சிரேஸ்ட இடைநிலை மாணவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் செல்வாக்கு" எனும் இவ்வாய்வாது பாடசாலை கணினி கூடங்களின் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு சீர் செய்வதற்கான விதப்புரைகளை முன்மொழிதாக அமைகின்றது. திருக்கோவில் வலயத்திலுள்ள ஆலையடிவேம்பு கோட்டத்தில் 1 AB, IC, Type II தரங்களையுடைய 08 பாடசாலைகளின் அதிபர்கள், கணினிப்பாட ஆசிரியர்கள், கணினி கூடப் பொறுப்பாளர்கள், மாணவர்கள் ஆகியோரும் கணினி கூடமும் மாதிரித் தெரிவாகத் தெரிவு செய்யப்பட்டு நேர்காணல், வினாக்கொத்து, அவதாளம் மூலமாக அவை அளவு ரீதியாகவும், பண்பு ரீதியாகவும் பல தரவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. பாடசாலை கணினி கூடங்களின் பௌதீக வளம், மனித வளம், கணினி கூடச் செயற்பாடுகள், சிரேஸ்ட இடைநிலை மாணவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் செல்வாக்குகள், பாடசாலைச் சூழல், இரண்டு மாறிகளுக்கிடையிலான தொடர்புகள், பாடசாலை கணினி கூடங்களின் செயற்பாடுகள் வினைத்திறனாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள், சிரேஸ்ட இடைநிலை மாணவர்களின் கணினி கூடப் பயன்பாட்டை அதிகரிக்கும் ஆலோசனைகள் போன்றவை ஆய்வு நோக்கத்தின் அடிப்படையில் தரவுகள் சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பாடசாலையில் கணினி கூடங்கள் சிறப்பாக செயற்படுவதற்கு போதுமானளவு பௌதீக வள வசதிகள் காணப்படாத நிலையும் கணினி கூடங்களை செயற்படுத்துவதற்கு போதுமானளவு மனித வளம் இல்லாத நிலையும், கணினி கூடத்தை செயற்படுத்துவதற்கு கணினி கூடப் பொறுப்பாளர்கள், அதிபர், கணினிப் பாட ஆசிரியர்கள் ஆர்வம் காட்டாத நிலையும், காணக்கூடியதாக உள்ளது. எனவே கணினிகூடங்கள் விளைத்திறனாக செயற்படாத நிலையை இது உணர்த்துகின்றது. மாணவர்களின் அறிவாற்றல்களை விருத்தி செய்யக்கூடிய வகையில் கணினிகூடங்கள் நவீன மயப்படுத்தப்பட வேண்டியதோடு கல்வி சார்ந்த சகல தரப்பினரதும் ஒத்துழைப்புக்கள் கணினிகூடங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைய வேண்டியது அவசியமாகும். en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka en_US
dc.subject வினைத்திறன் en_US
dc.subject மாற்றம் en_US
dc.subject செல்வாக்கு en_US
dc.subject இணையம் en_US
dc.title பாடசாலை கணினி கூட்டங்களின் வினைத்திறன் சிரேஷ்ட இடைநிலை மாணவர்களின் கற்றலில் ஏற்படுத்தும் செல்வாக்கு en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account