| dc.contributor.author | பாத்திமா ஸஜீதா, முகம்மட் ஜமால்தீன் | |
| dc.date.accessioned | 2024-04-08T05:41:21Z | |
| dc.date.available | 2024-04-08T05:41:21Z | |
| dc.date.issued | 2023 | |
| dc.identifier.citation | FAC1146 | en_US | 
| dc.identifier.uri | http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15362 | |
| dc.description.abstract | "கனிஸ்ட இடைநிலை வகுப்பு மாணவர்களின் வாசிப்புத்திறன் பிள்னடைவு சுற்றல் செயற்பாடுகளில் ஏற்படுத்தும் சவால்கள்" என்ற தலைப்பில் அமைந்த இவ் ஆய்வானது ஏறாவூர் கல்வி கோட்ட பாடசாலைகளில் உள்ள கனிஸ்ட இடைநிலை வகுப்பு மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அளவை நிலை ஆய்வாகும். இது கனிஸ்ட இடைநிலை வகுப்பு மாணவர்களின் வாசிப்புத் திறன் பின்னடைவு அவர்களின் கற்றலில் ஏற்படுத்துகின்ற சவால்களை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய சிபாரிசுகளையும் தீர்வுகளையும் கண்டறிவதளை நோக்காகக் கொண்டு இடம்பெற்றது. கனிஸ்ட இடைநிலை வகுப்பு மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டமையினால் ஏறாவூர் கல்விக் கோட்டத்திலுள்ள 18 பாடசாலைகளிலிருந்து கனிஸ்ட இடைநிலை வகுப்புக்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளுமாக 10 பாடசாலைகள் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டன. 10 பாடசாலைகளில் இருந்தும் 12 அதிபர்கள் நோக்க மாதிரியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதுடன் கனிஸ்ட இடைநிலை வகுப்புக் கற்பிக்கும் 108 ஆசிரியர்களிலிருந்து ஆண், பெண் என்ற ரீதியில் படையாக்கப்பட்டு பின் இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 2:1 எனும் விகிதாசாரத்தின் அடிப்படையில் 54 ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் 10 பாடசாலைகளில் இருந்தும் கனிஸ்ட இடைநிலை வகுப்பில் கல்வி கற்கும் வாசிப்புத் திறன் பின்னடைந்த 228 மாணவர்களிலிருந்து ஆண், பெண் என்ற ரீதியில் படையாக்கப்பட்டு பின் இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 2:1 எனும் விகிதாசாரத்தின் அடிப்படையில் 105 மாணவர்களும் ஆய்வு மாதிரியாக தெரிவு செய்யப்பட்டனர். மேலும் மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்ட 105 மாணவர்களின் 5:1 விகிதத்தில் 20 பெற்றோர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளிடமிருந்து வினாக்கொத்து, நேர்காணல் அவதானம், ஆவணச்சான்றுகள் போன்ற ஆய்வுக்கருவிகள் மூலம் தரவுகள் பெறப்பட்டன. பண்புரீதியாகவும், அளவரீதியாகவும் பெறப்பட்ட தரவுகள் அனைத்தும் Excel மென்பொருளினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு அட்டவணைகள், வரைபுகள் மூலம் குறித்துக்காட்டப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து முடிவுகள் பெறப்பட்டன. வாசிப்புத் திறன் பின்னடைவால் கற்றல் செயற்பாட்டில் சுயமாக வாசிக்க முடியாமை, பரீட்சை வினாக்களை விளங்கி விடையளிக்க முடியாமை, இணைப்பாடவிதான செயற்பாடுகளில் கலந்துகொள்ள முடியாமை போன்ற பல்வேறு சவால்கள் ஏற்படுகின்றன. எனவே இம் மாணவர்களின் வாசிப்புத்திறனை விருத்தி செய்யும் தீர்வுகளை முன்வைக்கக் கூடிய வகையில் அதற்கான விதப்புரைகளும் முன்மொழியப்பட்டுள்ளன. | en_US | 
| dc.language.iso | other | en_US | 
| dc.publisher | Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka | en_US | 
| dc.subject | வாசிப்புத் திறன் | en_US | 
| dc.subject | வாசிப்புத்திறன் பின்னடைவு | en_US | 
| dc.subject | கனிஸ்ட இடைநிலை வகுப்பு மாணவர்கள் | en_US | 
| dc.subject | கற்றல் | en_US | 
| dc.title | கனிஸ்ட இடைநிலை வகுப்பு மாணவர்களின் வாசிப்புத்திறன் பின்னடைவு கற்றல் செயற்பாடுகளில் ஏற்படுத்தும் சவால்கள் | en_US | 
| dc.type | Thesis | en_US |