IMPACTS OF DOMESTIC VIOLENCE ON WOMEN - A SOCIOLOGICAL STUDY ON

Show simple item record

dc.contributor.author SARAVANAMUTHTHU, SHAHARY
dc.date.accessioned 2024-04-19T03:44:35Z
dc.date.available 2024-04-19T03:44:35Z
dc.date.issued 2023
dc.identifier.citation FAC1185 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15399
dc.description.abstract இன்றைய உலகில் பல்வேறுபட்ட சமூகப் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டு வருவதனை அவதானிக்கலாம். அத்தகைய பிரச்சினைகளும் உலகளாவிய ரீதியாக பெனிகள் தொடர்பான பிரச்சினைகள் அதிக கவனம் செலுத்தப்படுவதனைக் காணலாம். நாட்டின் தாண்களாக விளங்கும் பெண்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில் இன்றைய சூழலில் வீட்டு வன்முறையினால் பெண்கள் பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் குறித்த ஆய்வுப் பிரதேசத்தில் நிலவும் வலுவான ஆணாதிக்க உணர்வு, பெண்கள் மீதான இறுக்கமான சமூகக் கட்டமைப்பு, பெண்களின் கல்வி வளர்ச்சியின்மை, பெண்களை இரண்டாம் பட்சமாக நடாத்துதல், புரிந்துணர்வின்மை. வறுமை, உழைக்க முடியாத நிலை, பொருளாதார நிலையில் பின்தங்கியிருத்தல், சீதனப் பிரச்சினை, ஆண்கள் போதைவஸ்து பாவித்தல் போன்ற பல காரணங்களினால் வீட்டு வன்முறையானது ஏற்படுகிறது. இதனால் பெண்கள் பல்வேறு உடல், உள, சமூக, பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்நோக்குவதுடன் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றமடைவது கடினத்தன்மையுடையதாக உள்ளது. இதனை கருத்திற் கொண்டு பெண்கள் வீட்டு வன்முறையிலிருந்து விடுபட்டு ஆண்களுக்கு சமமாகவும் சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்கும் ஆற்றலைப் பெற வேண்டும் எனும் அடிப்படையில் இப் பிரச்சினைக்கான தீர்வினையும் பரிந்துரைகளையும் முன்வைக்கும் ஆய்வாக இவ்வாய்வு அமைந்துள்ளது. சமூகவியல் சிறப்புக் கற்கையின் இறுதிப் பகுதியை பூர்த்தி செய்யும் வகையில் இவ்வாய்வானது கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரான் கிழக்கு கிராம சேவகர் பிரிவினை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இவ்வாய்வுக் கட்டுரையானது "பெண்கள் மீதான குடும்ப வன்முறையின் தாக்கங்கள் கிரான் கிழக்கு கிராம சேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஓர் சமூகவியல் ஆய்வு" எனும் தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்கான தரவுகள் எளிய எழுமாற்று மாதிரியைப் பயன்படுத்தி வினாக்கொத்து, நேர்காணல், கள ஆய்வு, அவதானம் எனும் முறைகளினூடாக சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட தரவுகளானது அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு பகுப்பாய்வின் மூலமாக வீட்டு வன்முறையினால் பெண்கள் எதிர்நோக்கும் உடல், உள, சமூக, பொருளாதார ரீதியான தாக்கங்கள் கண்டறியப்பட்டன. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka en_US
dc.title IMPACTS OF DOMESTIC VIOLENCE ON WOMEN - A SOCIOLOGICAL STUDY ON en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account