| dc.contributor.author | பாத்திமா ஸஹ்தியா, அப்துல் மஜீது | |
| dc.date.accessioned | 2024-09-26T05:50:17Z | |
| dc.date.available | 2024-09-26T05:50:17Z | |
| dc.date.issued | 2023 | |
| dc.identifier.citation | FAC 1376 | en_US |
| dc.identifier.uri | http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15767 | |
| dc.description.abstract | இன்றைய காலகட்டத்தில் நவீன தொழிநுட்பங்களின் பயன்பாட்டின் காரணமாக சமுக மக்களிடையே நவீன தொழிநுட்ப சாதனங்களின் பயன்பாடு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றமை அனைவரும் அறிந்த விடயமாகும். இன்று நகர்புறம், கிராமப் புறம் என்ற வேறுபாடு தெரியாத அளவு மக்களிடையே நவீன நாகரிக பண்பாடு மூழ்கிப்போய் காணப்படுகின்றது. இந்நிலையினை ஆய்வுப்பிரதேசமான கட்டுக்கெலியாவ கிராமத்திலும் காணக்கூடியதாக உள்ளது. மகாவலிக்கு முற்பட்ட உந்துருவ கிராமத்தில் காணப்பட்ட பழமையான பண்பாட்டம்சங்களில் பெரும்பான்மையானவை இன்றைய மக்களால் பின்பற்றப்படுவதில்லை. இதனை எடுத்துக்காட்டியும் மகாவலி திட்டத்தின் மூலம் கிராமம் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட விதத்தையும் மகாவலி திட்ட முறையையும் எடுத்துக்காட்டுவது இவ்வாய்வின் நோக்கமாக அமைந்து கொள்கின்றது. இதன்படி மகாவலிக் குடியேற்றத்திட்டத்தின் பின்னராக உந்துருவ கட்டுக்கெலியாவை எனும் பெயரிலிருந்து கட்டுக்கெலியாவையாக ஊர்ப் பெயர் மாற்றம் கண்டது. மீள்குடியேற்றத்தின்பின் மக்களது வாழ்வில் மாறிக் கொண்டதும் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வரும் வாழ்வியல் முறைகள் குறித்தும் இங்கு எடுத்து காட்டப்படுகின்றது. இவ்வகையில் ஆய்வானது கிராமத்தின் குடியேற்ற மாற்றத்தினையும் அதன் பின் ஏற்பட்ட மக்களது வாழ்வியல் பொருளதாதார மாற்றம் மற்றும் பண்பியல் மாற்றங்களையும் எடுத்துக்காட்டுவதாக ஆய்வு அமைகின்றது. | en_US |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka | en_US |
| dc.subject | கட்டுக்கெலியாவ | en_US |
| dc.subject | கிராமம் | en_US |
| dc.subject | பாண்பாடு | en_US |
| dc.subject | மகாவலி | en_US |
| dc.subject | குடியேற்றம் | en_US |
| dc.subject | வாழ்வியல் முறை | en_US |
| dc.title | கட்டுக்கெலியாவ கிராமத்தின் வாழ்வியல் அம்சங்கள் - ஒப்பியல் ஆய்வு | en_US |
| dc.type | Thesis | en_US |