PURCHASING INTENTION TOWARDS ORGANIC PADDY PRODUCTS IN KILINOCHCHI DISTRICT

Show simple item record

dc.contributor.author KAMALARUPAN, PERINPAM
dc.date.accessioned 2024-01-31T05:16:36Z
dc.date.available 2024-01-31T05:16:36Z
dc.date.issued 2020
dc.identifier.citation fcm2629 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/14840
dc.description.abstract இன்றைய காலகட்டத்தில் ஒரு நாட்டின் விவசாய அபிவிருத்தியானது பசுமைப்புரட்சி し செயற்கைப் பசளைகள், விவசாய இரசாயனங்கள், நவீன விவசாய இயந்திரங்கள் மற்றும் பகரணங்கள். புதிய பயிர்ப்பேதங்கள் ஆகிய உள்ளீடுகளைக் கொண்டு வளர்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் வியாபார நோக்குடன் தற்போதைய பசுமைப்புரட்சி முன்னெடுக்கப்படுவதுடன், செயற்கை நெல் உற்பத்திப் பொருட்களை மக்கள் நுகர்வதினால் பல்வேறு பிரச்சினைகளினை எதிர்நோக்கியுள்ளமையை தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் கரிம (நச்சுத்தன்மையற்ற) நெல் உற்பத்திக் கொள்வனவு உள்நோக்கத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் தொடர்பான ஆய்வு மூலம் அறியக்கூடியதாகவுள்ளது. இவ் ஆய்வின் நோக்கங்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் கரிம (நச்சுத்தன்மையற்ற) நெல் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான நுகர்வோரின் கொள்வனவு உள்நோக்கம் எந்தமட்டத்தில் உள்ளது. கரிம (நச்சுத்தன்மையற்ற) நெல் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான உள்நோக்கத்திற்கும் நுகர்வோரின் கொள்வனவில் செல்வாக்கு செலுத்தும் மாறிகளுக்கும் இடையிலான தொடர்பினைக் கண்டறிதல் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் கரிம (நச்சுத்தன்மையற்ற ) நெல் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கான உள்நோக்கத்தில் மேற்படி மாறிகள் எந்தளவு தாக்கம் செலுத்துகின்றன என்பதை கண்டறிதல் ஆகியனவாகும். இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ் ஆய்வினை மேற்கொள்வதற்காக நெல் உற்பத்திகளை கொள்வனவு செய்யும் நுகர்வோரில் 300 நுகர்வோர் எழுமாறாக தெரிவுசெய்யப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். இறுதியாக பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில், இன்றைய காலத்தில் அதிகரித்து வருகின்ற நோய்கள் மற்றும் ஆரோக்கியம் தொடர்பிலான பிரச்சினைகள் சார்பில் நுகர்வோர் விழிப்படைந்து வருகின்றமையினை காணக்கூடியதாகவுள்ளமை, கடந்தகாலங்களில் பயன்படுத்திய மரபணு மாற்றப்பட்ட உணவு உற்பத்திகள் மற்றும் இரசாயன உரம் பயன்படுத்திய உணவு வகைகளினைத் தவிர்த்து மக்கள் கரிம உற்பத்திகளைப் பயன்படுத்த முயலுகின்றமையை ஆய்வு மூலம் அவதானிக்க முடிகின்றமை, கரிம உற்பத்திகளின் நன்மைகளினை உணர்ந்த நுகர்வோர் அவர்கள் மட்டுமல்லாது ஏனையவர்களும் இதன் பயனினை அனுபவிக்கும் படி தமது உறவுகளினையும் இக் கரிம உற்பத்திகளை பயன்படுத்த ஊக்குவிக்கின்றமை போன்றவற்றின் ஊடாக எதிர்காலத்தில் நோயற்ற சமுதாயத்தினை உருவாக்க முடியும். en_US
dc.language.iso en en_US
dc.publisher Faculty of Commerce and Management Eastern University, Sri Lanka en_US
dc.title PURCHASING INTENTION TOWARDS ORGANIC PADDY PRODUCTS IN KILINOCHCHI DISTRICT en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account